பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு சட்டவிரோத நிதியுதவி தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லிபியத் தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் செயலற்ற ஊழல் மற்றும் சட்டவிரோத பிரச்சார நிதியுதவி தொடர்பான சில குற்றச்சாட்டுகளில் பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் அவரை விடுவித்தாலும், முக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
கடாபியிடமிருந்து பெறப்பட்ட நிதி, 2007ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என நிக்கோலஸ் சர்கோசி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
70 வயதான சர்கோசி, 2007 முதல் 2012 வரை பிரான்சின் ஜனாதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

