சூரியன் இன்று 5 பிரதேசங்களில் உச்சம் கொடுக்கின்றது !

62 0

நாட்டில் ஐந்து பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை (30) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வங்காலை , ஓமந்தை, வேதமகிழங்குளம், கேலபொகஸ்வெவ மற்றும்  திரியாய் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (ஆகஸ்ட் 30) வங்காலை, ஓமந்தை, வேதமகிழங்குளம், கேலபொகஸ்வெவ மற்றும் திரியாய் ஆகிய இடங்களுக்கு நேராக சரியாக நண்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.