சர்வதேச பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவரை துபாய் அதிகாரிகள் கைது செய்து பிரான்ஸ் நாட்டுக்கு நாடுகடத்தியுள்ளார்கள்.
மோசடி மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் முதலான பயங்கர குற்றங்கள் தொடர்பில் பிரான்ஸ் பொலிசாரால் தேடப்பட்டுவந்த இருவரைப் பிடிக்க இண்டர்போல் மற்றும் யூரோபோல் அமைப்புகள் சிவப்பு நோட்டீஸ் கொடுத்திருந்தன.
அதைத் தொடர்ந்து அவர்கள் துபாயில் இருப்பது தெரியவந்த நிலையில், துபாய் அதிகாரிகள் அவர்களையும் அவர்கள் தங்கியிருந்த வீடுகளையும், தொடர்ந்து கண்காணித்துவந்துள்ளனர்.

அவர்களுக்கு, மேலும் பல பயங்கர குற்றங்களுடனும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த துபாய் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து பிரான்ஸ் நாட்டுக்கு நாடுகடத்தியுள்ளனர்.

