போலி மாணிக்கக் கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது!

105 0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திரிவனகெட்டிய பிரதேசத்தில் போலி மாணிக்கக் கற்களுடன் சீன பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கடந்த வியாழக்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சீன பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 52 வயதுடைய இரு சீன பிரஜை ஆவார்.

கைதுசெய்யப்பட்ட சீன பிரஜையிடமிருந்து போலி மாணிக்கக் கற்கள், 1 மடிக்கணினி, ஐபாட் (iPod) மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சீன பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.