இலங்கை மின்சார சபையை 14 நிறுவனங்களுக்கு விற்பனை செய்தமை, சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் படி மின் கட்டணத்தை அதிகரித்தமை, சம்பளம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார ஊழியர் சங்கம் இன்று புதன்கிழமை (01) கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டதில் ஈடுபட்டதுடன் இதன்போது குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.




