பல வருடங்களின் பின்னர் இலாபம் ஈட்டிய லிட்ரோ!

140 0

கடந்த ஜூலை மாதம் பல வருடங்களின் பின்னர் லிட்ரோ நிறுவனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கடந்த 22 நாட்களில் சுமார் 27 லட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடும் போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (08) பிற்பகல் குறைக்கப்படும் எனவும் லிட்ரோ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.