நாட்டிற்குள் இனவாதம் ஏற்பட இடமளிக்கக்கூடாது- சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை

331 0

sarath-wijesuriyaநாட்டிற்குள் இனவாதம், மதவாதம் ஆகியன ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான ரீதியில் இனவாதத்தை தூண்டும் வகையிலான பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக உத்தியோகபூர்வமாக செயற்பட வேண்டிய பொலிஸார், தமது பொறுப்புக்களை மீறி செயற்பட்டமையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

இந்த சம்பவத்தின் பின்னர் இனவாதத்தை தூண்டும் வகையில் பல்வேறு இடங்களிலும்  வெவ்வேறு சம்பவங்கள் பதிவாகியிருந்தமையை அடுத்தே இது மிக மோசமான நிலைமை என்பதனை நாம் உணர்ந்துக் கொண்டோம்.
அதனால் அரசாங்கத்திற்கு முக்கியமான ஒரு விடயத்தை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து பிரஜைகளுக்கும் அமைதியான முறையிலும், சுதந்திரமான முறையிலும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே ஜனவரி 8ஆம் திகதி மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

எந்தவொரு இனத்தையும் குறைத்து மதிப்பீடு செய்தல், அவ்வாறு இல்லையென்றால் ஏதேனும் ஒரு மொழியை பேசும் தரப்பினரை குறைத்து மதிப்பீடு செய்தல் நாட்டிற்குள் இடம்பெறுமாக இருந்தால், அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில் தலையீடு செய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.

அரசாங்கம் அதனை பொருட்படுத்தாத வண்ணம் செயற்படுமாக இருந்தால், இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்லும். நல்லிணக்கத்திற்கான பயணத்திற்கு அது பொறுத்தமற்றது என நான் நினைக்கின்றேன்.

நாட்டிற்குள் இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என நாம் அரசத் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களை தொடர்பில் ஆராய்ந்து, அதனூடாக தற்போது காணப்படுகின்ற சமாதானத்தை சீர்குலைக்க வேண்டாம் என தேசிய நல்லிணக்கம், மொழிகள் மற்றும் அரச கரும அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படுவதன் ஊடாக வைராக்கியம் ஏற்படுவதாகவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.