அன்ரனி ஜெகநாதனின் கதிரைக்கு சண்டைபோடும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்!

90 0

tnaவடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் இறப்பையடுத்து அவரது கதிரைக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமக்குள் முட்டிமோதிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது வெற்றிடமாகியுள்ள பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரே நியமிக்கப்படவேண்டுமெனவும் குரல்கள் வலுத்துள்ளன.

இருப்பினும்,  பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியரத்தினத்தை நியமிக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தி வருகின்றார்.

ஏற்கனவே முன்னாள் கல்வியதிகாரியான அரியரத்தினம் தனக்கு கல்வியமைச்சர் பதவி வேண்டுனெ கோரிக்கைவிடுத்திருந்தபோதும், அதற்கு குருகுலராஜாவையே சிறீதரன் நியமித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையிலேயே அவரின் பதவிக்கு மோதல்கள் வலுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.