10 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்

420 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 10 வது நாளாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜெனிவா நகரை அண்மித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான பயணம் பல்வேறு நாடுகளை ஊடறுத்து பல்லின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்து , அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டது.இப் பயணம் பின்வரும் கோரிக்கைகளுடன் எதிர்வரும் திங்கள் கிழமை 26.09.2016 அன்று ஜெனிவா நகரில் நடைபெறும் மாபெரும் பேரணியில் இணைத்துக்கொண்டு ஐநா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்திடம் மனுவை கையளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
image11

image21

image3

image4
கோரிக்கைகள் :
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி நிரந்தர தீர்வு தமிழீழம்

1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.