காவலரணை காவல்துறை நிலையமாக மாற்றுவதற்கு முயற்சி

702 0

pujithaகிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை காவலரணை காவல்துறை நிலையமாக மாற்றுவதற்கு காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாக அக்கராயன் பிரதேசம் காணப்படுகின்றது. இங்கே அதிகளவான குற்றச்செயல்களும் நடைபெற்றுவரும்நிலையில் கால்துறை நிலையம் ஒன்றை அமைக்குமாறு அப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்களின் கோரிக்கைக்கமைய நான்கு வருடங்களுக்கு முன்னர் அங்கே காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு காவல்துறையினர் காவற்கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும், இங்கே சட்டவிரோத மண் அகழ்வு, காடழிப்பு, மரக்கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இவற்றைத் தடுப்பதற்கும் இனிவரும் காலங்களில் நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் அக்கராயனில் அமைந்துள்ள காவல்துறை காவலரணை காவல்துறை நிலையமாக மாற்றுவதற்கு காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment