அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம்

20772 29

அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அரசியல் கைதிகளின் வழக்குக்கள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று  வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டம் மேகொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூட்டப்பட்டிருந்ததோடு, பாடசாலைகளும் இயங்கவில்லை. மேலும் அரச திணைக்களங்கள் இயங்கிய போதும்  பொது மக்கள் எவரையும் எந்த திணைக்களங்களிலும் காணமுடியவில்லை, அத்தோடு கிளிநொச்சியின் போக்குவரத்தும் இன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதேவேளை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக கிளிநொச்சி  மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்திலும் பொது அமைப்புக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ,மக்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்

Leave a comment