மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளை முன்னிட்டு, தமிழ்த்தேசிய முன்ணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்துக்கு அருகாமையில் இன்று குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவானோர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை நேற்றைய தினம் பேர்லின் வாழ் மக்கள் பார்வையிட்டனர். கொல்லப்பட்ட மக்களுக்கும் , ஈகம் செய்த…