நிலையவள்

ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவுள்ளது(காணொளி)

Posted by - January 12, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஊறணி கிராமத்தின் கடற்கரைப்பகுதிக்கான பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நாளைமறுதினம் பொங்கல் தினத்திலன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக…
மேலும்

ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக பலர் உயிரிழப்பு

Posted by - January 12, 2017
ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்களும், வயோதிபர்களுமே அதிகளவில் உயிரிழந்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும்

கொழும்புத் துறைமுகதில் இத்தாலிய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்

Posted by - January 12, 2017
இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகம் வந்த இத்தாலிய போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.…
மேலும்

வடமேல் மாகாணத்தில் 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று

Posted by - January 12, 2017
வடமேல் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 115 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 102 பேருக்கும் எச்.ஐ.வி தொற்றியுள்ளமை…
மேலும்

வறட்சி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்- அஜித் பி பெரேரா

Posted by - January 12, 2017
வறட்சி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். மின்சார நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்கு தனியார் துறையினரிடம் இருந்த 60 மெகா வோல்ட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய…
மேலும்

இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது- எம்னெஸ்டி இன்டர் நேஷனல்

Posted by - January 12, 2017
நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமையானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் நிலைநாட்டப்படுகின்றமை எட்டாக்கனியாக இருக்கும் என எம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள், காணாமல் போனோரின் குடும்பங்களை சேர்ந்த…
மேலும்

ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்- ரணில்

Posted by - January 12, 2017
ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் உரிமை உள்ளிட்ட விடயங்களைப் பாதுகாத்து இலங்கையில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் மூலமே, இலங்கைக்கு மீண்டும்…
மேலும்

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியாகும்- ஜனாதிபதி செயலகம்

Posted by - January 12, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் ஆக்கபூர்வமான நிலைமாற்றத்தை கௌரவிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணைக்குழு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளதாகவும்…
மேலும்

வடக்கு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், இதுவரை தெற்கிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவில்லை- பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - January 12, 2017
நல்லிணக்க செயலணியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் குறித்த விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கையில் சிங்கள மக்கள் தொடர்பில் எந்தவித விடயங்களும்  தெளிவூட்டப்படவில்லை என ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதம செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதன்படி,…
மேலும்

முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு பெரும் சிரமம்

Posted by - January 12, 2017
முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படாது செயலிழந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச…
மேலும்