நிலையவள்

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

Posted by - May 3, 2017
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வும், ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சர்வதேச ஊடக சுதந்திர நாளான இன்று யாழ். நகரில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் பிரதான…
மேலும்

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியாது! – யாழ்.ஊடக அமையம்

Posted by - May 3, 2017
உலக ஊடக சுதந்திரதினம் இன்று(03) சர்வதேசம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் இவ்வருடமும் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து நீதி கிடைக்காத சூழலில் ஊடக சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகிறது. ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீதான படுகொலைகள், காணாமல் போகச்செய்தல்கள்…
மேலும்

வறட்சியான காலநிலை காரணமாக பல லட்சம் பேர் பாதிப்பு

Posted by - May 3, 2017
நாட்டில் நீடிக்கும் வறட்சியான காலநிலை காரணமாக, 2 லட்சத்து 61 ஆயிரத்து 440 குடும்பங்களைச் சேர்ந்த, 9 லட்சத்து 58 ஆயிரத்து 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வறட்சியான காலநிலையால், வடமாகாணமே…
மேலும்

திருகோணமலையில் முச்சக்கர வண்டியும், உந்துருளியும் மோதி விபத்து! இருவர் வைத்தியசாலையில்

Posted by - May 3, 2017
திருகோணமலை நகரில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீதிமன்ற சந்தியில் முச்சக்கர வண்டியும், உந்துருளியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. கடற்படைதள வீதியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும், நீதிமன்ற வீதியில் இருந்து வந்த உந்துருளியும்…
மேலும்

பாதுகாப்பு கமெராக்களின் கட்டுபாட்டில் வரும் இரண்டாவது நகரம்

Posted by - May 3, 2017
கொழும்பு நகரை தவிர, சீ.சீ.டிவி கமெராக்கள் ஊடாக முழு நகரையும் கண்காணிக்கும் செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது நகரமாக அநுராதபுரம் திகழவுள்ளது. அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கெமரா கண்காணிப்பு பிரிவை, நாளை காலை 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
மேலும்

அருவக்காடு கழிவகற்றும் திட்டத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

Posted by - May 3, 2017
புத்தளம் அருவக்காடு கழிவகற்றும் வேலைத்திட்டத்திற்காக இலங்கையில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மூலம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மேல் மாகாணத்தில் வியாபித்துள்ள கழிவு பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பணியானது, மாநகர மற்றும் மேல் மாகாண…
மேலும்

மே தின புகையிரத சேவைகள் மூலம் சுமார் 6 இலட்சம் வருமானம்

Posted by - May 3, 2017
மே தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக மேற்கொண்ட 2 விசேட ரயில் சேவைகள் மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு 6 இலட்சத்து 25 ஆயிரத்து 875 ரூபா வருமானம் கிடைத்துள்ளது. அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொழும்பு – கண்டி –…
மேலும்

கீதாவுக்கான தீர்ப்பு பாராளுமன்றத்திலுள்ள இன்னும் பலருக்கும் பொருந்தும்-தயாசிறி

Posted by - May 3, 2017
கீதா குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உட்படும் பலர் இன்னும் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கும் இந்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கீதா குமாரசிங்கவுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பதனால், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவி…
மேலும்

தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிக்க நடவடிக்கை

Posted by - May 3, 2017
தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவை அதிகாரமிக்க நிறுவனமொன்றாக அமைப்பதற்கும் அதற்காக சட்டமூலம் ஒன்றை தயாரிப்பது தொடர்பிலும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய வீதி…
மேலும்

விநாயகபுரம் காளி கோவிலில் தங்கநகைகள் திருட்டு

Posted by - May 3, 2017
திருக்கோவில்,  விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கோவிலின் கருவறைக் கதவு  திங்கட்கிழமை (2) இரவு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணியப்பட்டிருந்த தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன. அட்டியல், தோடு, தங்கச்சங்கிலி உள்ளிட்ட நகைகளே…
மேலும்