நிலையவள்

முப்படையே வெளியேறு என மக்கள் குரல் எழுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 18, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முப்படையே வெளியேறு என மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பும் காலம், வெகு தொலைவில் இல்லை என தான் நம்புவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும், மே மாதம் 18 நினைவேந்தல் நாளில் தமிழ்…
மேலும்

சீரற்ற காலநிலை: கொழும்பில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Posted by - May 18, 2017
நிலவும் சீரற்ற காலநிலையால் மரமொன்று முறிந்து விழுந்ததில் கொழும்பு லோடஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சில பாதைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதிக காற்று மற்றும் மழையால் மரம் முறிந்து விழுந்ததில் இந்தநிலை…
மேலும்

நுவரெலியாவில் பஸ் பள்ளத்தில் பாய்ந்ததில் 16 பேர் வைத்தியசாலையில்

Posted by - May 18, 2017
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் படுங்காயங்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து பட்டிப்பொல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று…
மேலும்

குளவி தாக்குதலுக்கு இலக்காகி 6 பெண்கள் மருத்துவமனையில்

Posted by - May 18, 2017
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதேசத்தின் தோட்டப்பகுதியொன்றில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர் இன்று மதியம் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன் போது காயமடைந்த 6 பேர் பொகவந்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. அவர்களின் நிலை கவலைகிடமாக இல்லை என…
மேலும்

தமிழரசு கட்சி யாழ் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று  தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உயிரிழந்த மக்களுக்காக ஈகை சுடர்…
மேலும்

முல்லைத்தீவு – கேப்பாபிலவு இராணுவ முகாமிற்குள் சம்பந்தன்

Posted by - May 18, 2017
முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களின் காணிகளை பார்வையிடுவதற்காக  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் கேப்பாபிலவு  இராணுவ முகாமிற்குள்  விஜயம்செய்துள்ளார். கேப்பாபிலவில் நிலமீட்பு போராட்டக் களத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கேப்பாபிலவு  மக்களுடனும்…
மேலும்

யாழ் நுணாவிலில் வீதி விபத்து மூவர் படுகாயம்

Posted by - May 18, 2017
நுணாவில் சந்தியில் இன்று பிற்பகல் 3.05 மணியளவில் யாழிலிருந்து கொடிகாமம் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இறக்கிக் கொண்டு நின்றது. பருத்தித்துறை வீதியாக வந்த இராணுவத்தினரின் பேருந்து கண்டிவீதியில் ஏற்றும் போது மோதிக் கொண்டு…
மேலும்

முள்ளிவாய்க்காலில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிர்ப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில்  இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உரையாற்றினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் தீடிரென நீங்கள் பயங்கரவாதத்தை…
மேலும்

நீதி மன்ற தடையுத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் பொலீஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

Posted by - May 18, 2017
பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்துள்ள கிறிஸ்த்தவ ஆலய சூழலில் பல…
மேலும்

வெள்ளவத்தையில் 5 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயம்

Posted by - May 18, 2017
வெள்ளவத்தை சாலிமன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடி கட்டிடம் ஒன்று இன்று முற்பகல் இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள்…
மேலும்