நிலையவள்

தொடரூந்தில் மோதி இளைஞன் பலி

Posted by - July 7, 2017
மின்னேரிய தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்தில் மோதி, இளைஞன் பலியாகியுள்ளார். மின்னேரிய, மஹரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த 18வயது இளைஞனே, இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார். 146 தொடரூந்து மைல்கல் பிரதேசத்தில் தொடரூந்தில் மோதிய இளைஞன், அருகிலுள்ள கறுப்பு பாலம் வரை இழுத்துச் செல்லப்பட்டு…
மேலும்

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்.

Posted by - July 7, 2017
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வானிலையில் சற்று மாற்றம் ஏற்பட கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில்,  மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை…
மேலும்

சட்டமாதிபர் திணைக்களம், நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க படவேண்டும்-மனோ

Posted by - July 7, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியது போன்று, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ்வரும் நிதி மோசடி விசாரணை பிரிவு, நீதி அமைச்சின் கீழ்வரும் சட்டமாதிபர் திணைக்களம் ஆகியவை அவரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய சகவாழ்வு…
மேலும்

குப்பை கொட்டிய சந்தேகத்தின் பேரில் 438 பேர் கைது

Posted by - July 7, 2017
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 438 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய திண்மக்கழிவு பொருள் முகாமைத்துவ உதவி நிலையத்தில் கடமையாற்றும் படையணிகளின் பிரதானி கேர்ணல் குணசேகர தெரிவித்தார்.…
மேலும்

யாழ்ப்பாணத்தில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 8 பேர் நேற்று இரவு  கைது(காணொளி)

Posted by - July 6, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து காங்கேசந்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும், கடற்படையினர் இன்று மதியம் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரு படகுகளும், இன்று மதியம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.…
மேலும்

மீன்பிடி தொடர்பான தொழிற்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமரால்ட(காணொளி)

Posted by - July 6, 2017
மீன்பிடி தொடர்பான தொழிற்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமரால்ட், ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எல்லையில்லா துயரத்திற்கு ஆளாகி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில், புதிய சட்டத்தால் இனி வாழமுடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்…
மேலும்

மீன்பிடி தொடர்பான தொழிற்சட்டமூலத்திற்கு இந்திய மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பு(காணொளி)

Posted by - July 6, 2017
இன்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கடற்தொழிற்சட்டத்திற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்திற்கு, இந்திய அரசு கன்டனம் தெரிவித்து தடுத்து நிறுத்வேண்டும் என தமிழக மீனவர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பாராளுமன்றத்தில் வெளிநாட்டு படகுகள் எல்லை…
மேலும்

வறட்சி காலநிலை காரணமாக பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல்

Posted by - July 6, 2017
வறட்சி காலநிலை காரணமாக பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மகாவலி பீ வலயத்தின் வெலிக்கந்த செயற்றிட்ட முகாமைத்துவ காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்…
மேலும்

நுவரெலியா நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் வழக்கு விசாரணைகளில் இருந்து விலகல்

Posted by - July 6, 2017
நுவரெலியா நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் வழக்கு விசாரணைகளில் இருந்து இன்று விலகியுள்ளனர். நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவானாக, கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் பணிப்புற்கணிப்பை மேற்கொண்டுள்ளனர் எவ்வாறாயினும் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் வழமைப் போல் இடம்பெற்று வருவதாக எமது செய்தி…
மேலும்

காணாமற்போதல் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – லக்ஷ்மன்

Posted by - July 6, 2017
பலவந்தமாக காணாமல் போதலில் இருந்து அனைவரும் பாதுகாப்பு பெறும் சர்வதேச சாசனம் குறித்த சட்டமூலம், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கடாவிருந்த நிலையில், முன்வைக்கடாது என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா…
மேலும்