நிலையவள்

மன்னார் மாவட்ட பாடசாலைகள் அனைத்தையும் புத்தளத்துடன் இணைக்க நடவடிக்கை-இ.இரவீந்தீரன்

Posted by - August 17, 2017
புத்தளத்தில் இயங்கும் மன்னார் மாவட்ட பாடசாலைகள் அனைத்தையும் நிரந்தரமாக புத்தளத்துடன் இணைக்கும் நடவடிக்கை விரைவு படுத்தப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்தீரன் தெரிவித்தார். வடமாகணப் பாடசாலைகள் 6 புத்தளத்தில் இயங்கும் நிலையில் அதனை நிரந்தரமாக புத்தளத்துடன் இணைப்பதற்கான…
மேலும்

டெங்கு பெருகும் அபாயகரமான இடங்களை சுத்தம் செய்ய தவறிய கரைச்சி பிரதேச சபை

Posted by - August 17, 2017
கிளிநொச்சியில் டெங்கு பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை நீண்ட காலமாக சுத்தம் செய்ய தவறியுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியிலிருந்து, இரணைமடு சந்திவரையான ஏ9 வீதியில் இவ்வாறு டெங்கு  நுளம்பு பெருக கூடிய நிலையில் குப்பைகூழங்கள் காணப்படுகின்றன.…
மேலும்

அரச செயலகங்கள் எவற்றிலும் நிரந்தரமான பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் இல்லை-சிறிதரன்

Posted by - August 17, 2017
நெடுந்தீவில் இயங்கும் அரச செயலகங்கள் எவற்றிலும் நிரந்தரமான பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் இன்றி உதவியாளர்கள் பணிபுரிவதோடு கூட்டங்களிற்கு மட்டுமே அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வருவதாக நேற்றைய தினம் இடம்பெற்ற நெடுந்தீவுப் பி்ரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. நெடுந்தீவுப் பிரதேச செயலாளர்…
மேலும்

வட மாகாண பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

Posted by - August 17, 2017
வடமாகாண புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களுக்கு வன்னிப் பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துடுத்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில்…
மேலும்

தலவாக்கலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - August 17, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தெவிசிரிபுர  ரத்னிலகல் கொலனி பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை  மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் வீட்டுத் தோட்டத்திலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 67 வயதுடைய கிருஷ்ணன் தங்கவேல் என்பவரின் சடலம்…
மேலும்

கிழக்குப் பல்கலைக்கழக விடுதி மூடல்

Posted by - August 17, 2017
கிழக்குப் பல்கலைக்கழக விடுதி காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக விடுதியின் பதிவாளர் தெரிவித்துள்ளார். இன்று நண்பகல் 12 மணியுடன் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளைவிட்டு வெளியேறுமாறும் திருகோணமலையை தவிர்ந்த கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து விடுதி மாணவர்களையும் வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிழக்குப்…
மேலும்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!

Posted by - August 17, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி சிகரெட்டுகளை வைத்திருந்த நபரொருவர் மருதானையில் வைத்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிகரெட் தொகை பாரவூர்தியில் இரகசியமான முறையில் வைக்கப்பட்டு, கொண்டு செல்ல முற்பட்டவேளையில் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரிடமிருந்து 50 இலட்சத்துக்கும் பெறுமதியான சிகரெட்கள் பறிமுதல்…
மேலும்

கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் ; மீட்புப் பணிகள் தீவிரம் ; நீர்கொழும்பில் சம்பவம்

Posted by - August 17, 2017
கட்டடநிர்மாண வேலைகள் இடம்பெற்றுவரும் மாடிக் கட்டிடமொன்றின் கொங்றீற் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி மூவர் காயமடைந்துள்ள நிலையில், மீட்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேவேளை குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியுள்ளதாகவும் அவரை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்…
மேலும்

விஜேதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வேண்டாம்- அஸ்கிரிய பீடம் விசேட அறிவிப்பு

Posted by - August 17, 2017
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமாகிய விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு தமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாக அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது. அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில்  இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.…
மேலும்

தரம் 5 பரீட்சை சட்ட திட்டங்களை மீறுவோருக்கு கடுமையான சட்டம்

Posted by - August 17, 2017
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் சட்ட திட்டங்களை மீறி நடப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக…
மேலும்