நிலையவள்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய ஒன்பது உழவுஇயந்திரங்களும் சாரதிகளும் பொலிசாரால் கைது

Posted by - September 1, 2017
நேற்று இரவு முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம்  இன்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில்  ஒன்பது உழவுஇயந்திரங்களும்  ஒன்பது சாரதிகளும்  பொலிசாரால்  கைது குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிசாரிற்கு  கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர்…
மேலும்

ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பில் தகவல் வழங்க தயார் – சரத்

Posted by - September 1, 2017
ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான சட்டரீதியான விசாரணைகளில் தகவல்களை வெளிப்படுத்த தயாராக உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இது குறித்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அவர்…
மேலும்

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் கஞ்சா பொதி மீட்பு – ஒருவர் கைது

Posted by - September 1, 2017
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் 2 கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் போதைப்பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் பிரிவினரினால் குறித்த…
மேலும்

நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் மீட்பு

Posted by - August 31, 2017
படகு விபத்துக்குள்ளானதில் நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் நால்வரை இன்று அதிகாலை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அனலைத் தீவுக்கு மேற்கு பகுதியில் இந்தப் படகு விபத்துக்கு முகம்கொடுத்திருந்த நிலையில், அங்கு ரோந்துப் பணிகளுக்காகச் சென்ற வேளை அதனை கண்ணுற்ற படையினர், இவர்களை…
மேலும்

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை

Posted by - August 31, 2017
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் டெல்லியிலிருந்து இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய…
மேலும்

பெரும் அச்சுறுத்தலின் மத்தியில் கிளிநொச்சி நகரம்

Posted by - August 31, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயநிலை காரணமாக சுகாதாரத் துறையினரும், மன்னார் பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி சுதாகர் தலைமையிலான டெங்கு விசேட நடவடிக்கைப் பிரிவினரும் மும்முரமாக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவினரது ஆய்வுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வீடுகளில்…
மேலும்

கூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளுராட்சி தேர்தலில் புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் – ஹக்கீம்

Posted by - August 31, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களின் முயற்சிகளை முறியடித்து, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் புதியதொரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…
மேலும்

உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

Posted by - August 31, 2017
உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் வைத்து கையொப்பமிட்டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் கமல்…
மேலும்

ரத்துபஸ்வல சம்பவம் – பிரிகேடியர் அனுர தேசப்பிரியவுக்கு பிணை

Posted by - August 31, 2017
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய மற்றும் இராணுவ சார்ஜெண்ட் ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் பிணை வழங்கியது. இவ்வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு…
மேலும்

புலமை பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் இன்று ஆரம்பம்

Posted by - August 31, 2017
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திருத்தப் பணிகள் எதிர்வரும் 5ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் W.M.N.J புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.…
மேலும்