நிலையவள்

ரயில் பாதையில் இரண்டு துண்டுகளாக இளம் பெண்ணின் சடலம்

Posted by - September 19, 2017
இளம் பெண்ணொருவர் ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹிக்கடுவையில் இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவையில், இன்று முற்பகல் பதினொன்றரை மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாகரீக உடையணிந்த அந்தப் பெண்ணின் உடல், புகையிரதம் ஏறியதில் தண்டவாளத்திலேயே இரு துண்டுகளாகச் சிதைந்திருந்ததாக ஹிக்கடுவை பொலிஸார்…
மேலும்

மன்னார் விபத்தில் இளைஞன் பலி !!!

Posted by - September 19, 2017
மன்னார்,முருங்கன் கட்டையடம்பன் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முந்தல் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் விபத்தில் உயிரிழந்தவர் முந்தல்,கொத்தாந்தீவு கொலனியைச் சேர்ந்த 20 வயதுடைய பாருக் முகம்மது தில்ஷான் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேங்காய் கொள்வனவு…
மேலும்

சுமந்திரன் கொலை முயற்சி; 05 பேருக்கும் பிணை

Posted by - September 19, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ். நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே…
மேலும்

சட்டவிரோதஉலோகம் கொண்டு வந்த ஒருவர் கைது

Posted by - September 19, 2017
தங்கத்திற்கு சமனான உலோகங்களை சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவின் போதை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர்…
மேலும்

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

Posted by - September 19, 2017
 குறித்த மீனவர்களுடன் அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்திய ட்ரோலர் இயந்திரங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட மீனவர்கள்,ட்ரோலர் இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் கரைநகரிலுள்ள இலங்கை கடற்படையினரின் கப்பல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கைது…
மேலும்

ரோஹிங்ய அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கையின் முடிவு-ரணவக்க

Posted by - September 19, 2017
ரோஹிங்ய அகதிகளை இலங்கைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் கணக்கில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதேவேளை, அகதிகள் விடயத்தைக் கையாளும் போது, நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும்…
மேலும்

வடமாகாண வருடாந்த விவசாய கண்காட்சி இன்று யாழில் ஆரம்பம்!

Posted by - September 19, 2017
வடமாகாண வருடாந்த விவசாய கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்ததியை எதிர்நோக்கிய நிலைபேறான விவசாயம் எனும் தொனிப்பொருளுடன் மாகாண விவசாய அமைச்சு யாழ் திருநெல்வேலி விவசாய பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை வடமாகாண…
மேலும்

மின்சார அமைச்சின் அதிரடி தீர்மானம்

Posted by - September 19, 2017
அத்தியவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை முதல் நேர்முக தேர்வு இடம்பெறவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, மின்சார…
மேலும்

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Posted by - September 19, 2017
பாடசாலை நேரப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலைமைகளை பாடசாலையின் அதிபருக்கு கட்டுப்படுத்த முடியாமல் போனால் , காவற்துறையினர் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த…
மேலும்

நாளை நள்ளிரவு முதல் தொடரூந்து தொழிற்சங்க கூட்டு பணிப்புறக்கணிப்பு

Posted by - September 19, 2017
வேதனங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக நாளை நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு குறிப்பிட்டது போல் முன்னெடுக்கப்படும் என தொடரூந்து செயல்பாட்டு மேற்பார்வை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டு தெரிவித்துள்ளது. வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்…
மேலும்