நிலையவள்

தவறான ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது

Posted by - September 20, 2017
தவறான முறையில் ஆவணங்களை தயாரித்த மூவர் மாபோலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட வேளையில் சந்தேக நபர்களிடமிருந்து…
மேலும்

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

Posted by - September 20, 2017
ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் மட்டக்குளிய, ஹந்தல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாண குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்திய சோதனையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Posted by - September 20, 2017
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணாமாக அமர்வுகள் நண்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாகாண சபைகள் திருத்தச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை நீதிமன்றத்தில் இராணுவத் தரப்பு

Posted by - September 20, 2017
இலங்கையில்  இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும் சரணடையவில்லை என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்…
மேலும்

இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

Posted by - September 20, 2017
இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டை பிரித்தாள முற்பட்ட விடுதலைப் புலிகளை தோற்கடித்து தற்போது நாடு சமாதானத்தை நோக்கி முன்னேறுகிறது.…
மேலும்

மின்சார சபையின் ஊழியர்களிற்கு மகிழ்ச்சிகர செய்தி!

Posted by - September 20, 2017
மின்சார சபையின் பொறியிலாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல ஊழியர்களினதும் வேதனத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு 13 சதவீதமும், தொழில்நுட்பம் சாரா பணியாளர்களுக்கு 6 சதவீத வேதன அதிகரிப்பையும்…
மேலும்

ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு

Posted by - September 20, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் நேற்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளனர். 20வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்ட மூலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில்…
மேலும்

வவுனியா மரக்காரம்பளை வீதியில் விபத்து : சிறுவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்

Posted by - September 19, 2017
வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே இன்று (19) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவ்விபத்து தொடர்பாக மேலும்…
மேலும்

27 ஆம் திகதி காலாவதியாகும் மாகாண சபைகள் கலைக்கப்படும்- கிரியெல்ல

Posted by - September 19, 2017
காலாவதியாகும் மாகாண சபைகளை கலைத்துவிடவுள்ளதாக பாராளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி கால எல்லை நிறைவடையவுள்ள மாகாண சபைகளே இவ்வாறு கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப்…
மேலும்

மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட வட்டுவாகல் பிரதேச மக்களுக்கு தியானம் மிகவும் அவசியமானது- க.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - September 19, 2017
மக்கள் வயது வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச மக்களுக்கு தியானம் மிகவும் அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பிரம்ம குமாரிகள் இல்ல கட்டட திறப்பு விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.…
மேலும்