நிலையவள்

காவற்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை

Posted by - September 21, 2017
கிரிபாவ – பதலவெல பிரதேசத்தில் காவற்துறையினர் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் நிகவெரடிய பிரிவுக்கு பொறுப்பான காவற்துறை அதிகாரியின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று அந்த பிரசேத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தச் சென்ற நிக்கவெரடிய பிரதேசத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள்…
மேலும்

திட்டமிட்டபடி பாராளுமன்றத்தின் முன்பு இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - September 20, 2017
காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி நான்கு அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இராணுவ வீரர்களை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம், தேசிய சுதந்திர முன்னணி,…
மேலும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டொனல்ட் டிரம்புடன் சந்திப்பு

Posted by - September 20, 2017
யூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இலங்கை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திதுக் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் ஜயந்தி புஷ்பா குமாரியும் டொனால்ட் ட்ரம்ப்பின்…
மேலும்

யானை தாக்கி ஒருவர் பலி!

Posted by - September 20, 2017
திருகோணமலை – சேறுநுவர பகுதியில் உள்ள இலிங்கபுரம் குளத்திற்கு அருகில் காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த பகுதியில் மாடுகளை தேடுவதற்காக சென்ற வேளையில் அங்கிருந்து யானை ஒன்றினால் அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் சேறுநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மஹியங்கனையில் வாகன விபத்து; இருவர் பலி

Posted by - September 20, 2017
மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானர். மஹியங்கனை – பதியத்தலாவ பிரதான வீதியின் 49 ஆம் கட்டை பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் சென்ற பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் இருந்து இரண்டு…
மேலும்

நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

Posted by - September 20, 2017
யாழ்ப்பாணம் நாவலர் வீதி பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலில் உயிரிழந்த நபரின் மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 4 உந்துருளிகளில்…
மேலும்

கழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம்

Posted by - September 20, 2017
மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக்கல்செய்யப்பட்டது.…
மேலும்

பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி கொள்ளை!

Posted by - September 20, 2017
வவுனியா கோவிற்குளம் தபால்பெட்டிச் சந்திக்கருகில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் வண்டியில் வந்த இனந்தெரியாத இருவர் அபகரித்துச் சென்றுள்ளனர். இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கோவிற்குளம் தபால்பெட்டிச் சந்தியில் உள்ள கடைத்தொகுதி…
மேலும்

10ம் தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

Posted by - September 20, 2017
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு…
மேலும்

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் எழுத்து மூல அறிவித்தல்

Posted by - September 20, 2017
இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியதில்லை என சட்டமா அதிபர் எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று…
மேலும்