நிலையவள்

நைஜீரியப் பிரஜை கைது

Posted by - October 18, 2017
கண்டி நகரில் வீசா அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடிய நைஜீரிய பிரஜை ஒருவரை கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின்படி விசாரணைகளை நடத்திய பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை…
மேலும்

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து 3 பேர் காயம்

Posted by - October 18, 2017
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டுவிலகி சுமார்  220 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு குணசிங்கபுர பகுதியிலிருந்து அட்டனிற்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 4.30 மணியளவில் அட்டன் –…
மேலும்

மஹிந்தவையும் சட்டத்தின்முன் கொண்டுவருவோம்- வஜிர அபேவர்தன

Posted by - October 18, 2017
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த பல்வேறு மோசடிகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவையும் சட்டத்தின் முன் கொண்டு வருவோம் என என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான வஜிர அபேவர்தன …
மேலும்

பண்டாரகமையில் பொலிஸார்-மர்ம நபர்கள் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - October 18, 2017
பண்டாரகமையில், பொலிஸாருக்கும் கால்நடை கடத்தல்காரர்களுக்கும் இடையில் இன்று (18) காலை பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. கிடைத்த துப்பு ஒன்றின் அடிப்படையில், மராவ பகுதியில் பயணிக்கும் வாகனங்களைச் சோதனையிடும் வகையில் பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தினர். அப்போது, அதிசொகுசு வேன் ஒன்று…
மேலும்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு உத்தரவு

Posted by - October 18, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் உதேஷ் ரணதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் முறைப்பாட்டாளரை அச்சுறுத்தியமை தொடர்பான…
மேலும்

பிணை முறி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்

Posted by - October 18, 2017
சர்ச்சைக்குரிய பினை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு அவ்வாணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரியவினால் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பிலான சாட்சிகள் திரட்டும் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த நிலையில் இவ்வாணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 27ம் திகதியுடன்…
மேலும்

உமா ஓயா பாதிப்பு பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டம்

Posted by - October 18, 2017
உமா ஓயா பல்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்றை பண்டாரவளை நகரை அண்டிய பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
மேலும்

சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை – உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

Posted by - October 17, 2017
அம்பாறை மாவட்ட கள உத்தியோகத்தர்களுக்கு வாக்குறுதியளித்தவாறு மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்படாமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டாலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள…
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 09 பேர் நியமனம்

Posted by - October 17, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 09 பேர் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அம்பாறை, கொழும்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய 05…
மேலும்

முச்சக்கரவண்டிகள் நேர்க்கு நேர் மோதி விபத்து : 6 பேர் படுகாயம்

Posted by - October 17, 2017
மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் முச்சக்கரவண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ்கெலியா பகுதியிலிருந்து…
மேலும்