நிலையவள்

ரணில் விக்ரமசிங்கவின் விசேட அறிவிப்பு!

Posted by - November 30, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் விசேட அறிவிப்பு ஒன்றை நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார். பாதீடு மற்றும் தற்போதைய காலக்கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறித்து அவர் விசேட அறிவிப்பை விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது
மேலும்

பெரகல பிரதேசத்தில் மண் சரிவு!

Posted by - November 30, 2017
பெரகல பிரதேச,  பதுளை – கொழும்பு வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, புகையிரத சேவைகள் பாதிப்பு (காணொளி)

Posted by - November 30, 2017
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பகுதிக்கு அண்மித்த பகுதியில், நேற்று அதிகாலை 1.00 மணியளவில் பாரிய மண்சரிவுகளும், கற்களும் புரண்டு விழுந்துள்ளதன் காரணமாக, மலையக புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற…
மேலும்

கனேடிய அரசு இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்- கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை(காணொளி)

Posted by - November 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரகூக்கு கனேடிய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னனிடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின்…
மேலும்

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் (காணொளி)

Posted by - November 30, 2017
இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டாரீஸ், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறினால், தனி நாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் ஏற்படும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 30, 2017
நல்லாட்சி அரசாங்கம், அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறினால், தனி நாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் ஏற்படும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மின்தடை : திருத்தப்பணிகள் தாமதமாகுமாம் !

Posted by - November 30, 2017
மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்றபட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையையடுத்து மரங்கள் முறிந்து மின்சாரக்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.…
மேலும்

இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலையே தொடரும் -வானிலை அவதான நிலையம்

Posted by - November 30, 2017
இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியிருக்கிறது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரேபியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது. இதனால், இன்று முழுவதும் தற்போதைய சீரற்ற காலநிலையே தொடரும்…
மேலும்

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - November 30, 2017
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை பதுளை…
மேலும்

புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - November 30, 2017
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதைகளில் மண்சரிவு மற்றும் மரம் முறிவுகள் ஏற்பட்டு புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய களனிவெளி புகையிரத வீதி, அவிசாவளை தொடக்கம் கொட்டாவ வரையிலான புகையிரத வீதியில் பல இடங்களில் மரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதாக…
மேலும்