நிலையவள்

ஜனாதிபதி – பிரதமர் பேச்சு தொடர்பில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை- PMD

Posted by - February 12, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எதுவித உடன்பாடுகளும் ஏற்பட வில்லையெனவும், இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும்,  உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளல் அல்லது அரசாங்கத்தின் எதிர்கால…
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறுவாசிப்பாகும்! – அனந்தி சசிதரன்!

Posted by - February 12, 2018
நடைபெற்று முடிந்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறு வாசிப்பாக அமைந்துள்ள நிலையில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களாக மக்களால் வெற்றிபெறச் செய்யப்பட்டவர்கள் ஊழலற்ற நேர்மையான சேவையை எமது மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என வட…
மேலும்

வாஸ் குணவர்தனவிற்கு 5 வருட கடூழிய சிறைதண்டனை

Posted by - February 12, 2018
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறை தண்டனையை விதித்துள்ளது
மேலும்

மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றும் போராட்டத்தில் அரசாங்கம் – ராஜித சேனாரத்ன

Posted by - February 12, 2018
பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி…
மேலும்

சுமூகமான தேர்தலை நடத்துவதுக்கு ஊடகங்களே காரணம் – பொலிஸ்

Posted by - February 12, 2018
கடந்த 10ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பே காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.…
மேலும்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு

Posted by - February 12, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
மேலும்

நாமலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - February 12, 2018
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்இ இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் மே மாதம் 18…
மேலும்

ஐ.தே.க செயலாளராக இம்தியாஸ் பாக்கிர்மாக்காரை நியமிக்குமாறு கோரிக்கை

Posted by - February 12, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக இம்தியாஸ் பாக்கிர்மாக்காரை நியமிக்குமாறு கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை ஐக்கிய தேசிய கட்சி எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டள்ளது. ஐக்கிய தேசிய…
மேலும்

ஊர்வலம், கூட்டம் என்பன இன்றும் தடை – பொலிஸ் தலைமையகம்

Posted by - February 12, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான எந்தவொரு ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும்  இன்றும் (12) இடம்பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது. கட்சியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஊர்வலம் நடாத்துதல்,…
மேலும்

ஐ.தே.க முன்னோக்கிச் செல்ல சஜித் கட்சிப் பொறுப்பேற்க வேண்டும் – ஸ்ரீநாத் பெரேரா

Posted by - February 12, 2018
ஐ.தே.க முன்னோக்கிச் செல்ல சஜித் கட்சிப் பொறுப்பேற்க வேண்டும், இவர்கள் வெளியேர வேண்டும் ஐக்கிய தேசிய கட்சி முன்னோக்கிச் செல்வதற்கு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்…
மேலும்