நிலையவள்

எதிர்க் கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன அல்லது ரணில் விக்ரமசிங்க- கூட்டு எதிர்க் கட்சி

Posted by - February 18, 2018
ஐக்கிய தேசியக் கட்சி தனி அரசாங்கம் ஒன்றை அமைத்தால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமை பதவிக்கு  தினேஷ் குணவர்தன எம்.பி.யின் பெயரை பிரேரிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறில்லாமல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புதிதாக அரசாங்கமொன்றை அமைக்குமாயின் எதிர்க் கட்சித்…
மேலும்

அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை

Posted by - February 18, 2018
அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பரீட்சையில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகள் தற்பொழுது…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - February 18, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
மேலும்

வாரியபொல விபத்தில் பெண் பலி

Posted by - February 18, 2018
வாரியபொல – பாதெனிய பேருந்து நிலையத்தின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் பாதெனிய -வீரகஹமுல பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய…
மேலும்

யாழில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - February 18, 2018
யாழ்ப்பாணம், தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய செல்வரத்தினம் சுரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி வீட்டிலிருந்து உறவினரொருவரது திருமணத்திற்காக…
மேலும்

வறட்சி நிலை தோன்றலாம் என எச்சரிக்கை

Posted by - February 18, 2018
நாட்டில் அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் வறட்சி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் மாதமளவில் பருவமழை பெய்யும் வரையில் நாட்டில் பாரிய மழை வீழ்ச்சி காணப்படாது என்றும் இதனால் நாட்டில் வறட்சி நிலை தோன்றக் கூடும்…
மேலும்

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தலைமையில் இன்று விசேட ஒன்றுகூடல்

Posted by - February 18, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தலின் பின்னரான அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன் போது…
மேலும்

மக்கள் கண்டு உணரும் மாற்றங்களுடன் தேசிய அரசாங்கம் தொடரும்- அமைச்சர் கயந்த

Posted by - February 18, 2018
உரிய மாற்றங்களை மேற்கொண்டு மக்கள் அதனைக் காணும்  விதத்திலும் உணரும் படியாகவும் இந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். இந்த தேர்தல் மூலம்…
மேலும்

வீட்டில் இருந்த கணவன், மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - February 18, 2018
தலங்கம பிரதேசத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.…
மேலும்

பிரதமர் பதவி விலகாவிடின், அமைச்சரவை கலைக்கப்படும்?

Posted by - February 18, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகாவிடின் தற்பொழுதுள்ள  அமைச்சரவையை  உடன்  கலைத்துவிடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 46 (2) (ஆ) உறுப்புரையில் பிரதமர் தனது பதவியை வகிப்பது அமைச்சரவை நடைமுறையில் உள்ளவரைதான் எனக்…
மேலும்