நிலையவள்

ஜா-எல தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

Posted by - February 20, 2018
ஜா-எல, ராஜமாவத்தையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த தொழிற்சாலையில் தீப்பரவியதுடன் தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் முயற்சியில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

அரசியல் நெருக்கடியை தீர்க்க விரைந்து செயற்பட வேண்டும் – காதினல் மெல்கம் ரஞ்சித்

Posted by - February 20, 2018
தற்போது இருக்கின்ற அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். அதிகார மோதலில் ஈடுபடுவதை விட்டு நாட்டு மக்களை பற்றி சிந்தித்து அரசியல் நெருக்கடியை தீர்த்து…
மேலும்

2020இல் மீன்பிடித்துறையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்

Posted by - February 20, 2018
2020ஆம் ஆண்டளவில் மீன்பிடித்துறையில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் எட்டாயிரத்து 562 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சின் தேசிய…
மேலும்

இன்னும் 2 வெசாக் போயாக்கள் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 20, 2018
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை கூட்டு எதிர்க் கட்சிக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த அரசாங்கத்துக்கு இருப்பது, இன்னும் …
மேலும்

நாளை அமைச்சரவை மாற்றம் ?

Posted by - February 20, 2018
அமைச்சரவை மாற்றமொன்று நாளை (21) புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்பொழுதுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை தீர்த்ததன் பின்னர், புதிய அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், அமைச்சர்களின் எண்ணிக்கையில் மாற்றம் வரமாட்டாது எனவும், குறிப்பிட்ட…
மேலும்

அரசியல் குழப்பம் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை வெளியிட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Posted by - February 19, 2018
உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை நாட்டை ஸ்திரமற்ற நிலைமையில் இருந்து பாதுகாக்க தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து பயணிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியமைக்கு அமைவாக தொடர்ந்து தேசிய அரசாங்கத்தில் இருந்து  பயணிக்க தீர்மானித்தோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
மேலும்

தலைமன்னார் கிராம மீனவர்கள் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்

Posted by - February 19, 2018
இலங்கை கடல்பரப்பில் உள்ள ‘தீடை’ பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுவரும் தலைமன்னார் கிராம மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் இடையூரை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீடை பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற ஒரு தொகுதி மீனவர்களை கடற்படையினர் திருப்பி…
மேலும்

மைத்திரி – ரணில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவர் – வாசு

Posted by - February 19, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பலவீனம்…
மேலும்

முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Posted by - February 19, 2018
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பகுதியிலிருந்து ருவான்புர கிராமத்திற்கு…
மேலும்

8 இலட்சம் பெறுமதியான சிக்கரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - February 19, 2018
சட்டவிரோதமான முறையில் சிக்கரெட்டுக்களை இந்நாட்டுக்கு கொண்டுவந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த குறித்த நபர் சூட்சுமமான முறையில் தனது பயணப்பொதிக்குள் குறித்த சிகரெட்டுகளை மறைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்க திணைக்கள ஊடகப்…
மேலும்