நிலையவள்

யாழ் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியா்கள் 108 தேங்காய் உடைத்து போராட்டம்!

Posted by - April 6, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து இன்றையதினம்(06-04-2018) வெள்ளிக்கிழமை நண்பகல் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடக்கம்…
மேலும்

காணாமற்போனோரின் உறவுகளை சந்தித்தார் கருணாஸ்!!

Posted by - April 6, 2018
காணாமல்போனவர்களின் உறவுகளை பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்டசபையின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (கருணாநிதி) சந்தித்துள்ளார். மேற்படி சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பில் காணாமல்போனவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடிய கருணாஸ் அவர்களின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கேட்டறிந்துள்ளார். தமிழகத்தில்…
மேலும்

ஈழத் தமிழ் மாணவர்களுக்கு தனியான பல்கலைக்கழகம்!! -கருணாஸ்!!

Posted by - April 6, 2018
ஈழத் தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்காக தென்னிந்திய நடிகர் கருணாஸ் இன்று யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். பல்கலைக்கழத்திற்காக அடிக்கல்லை நாட்ட வருமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கருணாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.யாழ்.வந்த நடிகர் கருணாஸ் காலை 9.30 மணிக்கு வடமாகாண…
மேலும்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 73 வயது வயோதிபர்

Posted by - April 6, 2018
முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக சிறுமியின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று மாலை குறித்த 73 வயதுடைய…
மேலும்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நீதிமன்றத்தின் கடும் தீர்ப்பு

Posted by - April 6, 2018
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014 ஆம்…
மேலும்

ஆலய வாளால் வாள் வெட்டு : பூசாரிகள் கைது!!

Posted by - April 6, 2018
மட்டக்களப்பு தலையமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாமாங்கம், குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு, கத்திக்குத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசாரிகள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற, நீதவான் எம்.கணேசராஜா…
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - April 6, 2018
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மத்தேகொட பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு காஹாதுடுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காஹாதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்தேகொட பிரதேசத்தில் வைத்து காஹாதுடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களை  அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டாம்! -எஸ்.பி. திசநாயக்க

Posted by - April 6, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களை  அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார் என அமைச்சர் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனைவரையும் தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்…
மேலும்

O/L பரீட்சையில் 51.12 சதவீத மானவர்களே ஆங்கில பாடத்தில் சித்தி

Posted by - April 6, 2018
டிசம்பர் 2017 ல் நடைபெற்ற பொதுப் பரீட்சை முடிவுகளின் பகுப்பாய்வைப் பொறுத்தவரையில், 51.12 சதவீத மாணவர்களே சித்தியடைந்துள்ளதாகவும் இது ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில் அதிக மாணவர்கள் சித்தியடையாத பாடமாகும் என புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பாடத்துக்கு 296,157 மாணவர்கள் தோற்றிய…
மேலும்

மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு வெளிநாடு செல்ல தடை

Posted by - April 6, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சதொச நிதியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரிவினரால்…
மேலும்