நிலையவள்

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

Posted by - May 6, 2018
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா, நியுசிலாந்து செல்வதற்கு முயற்சித்த 131 இலங்கையர்கள் மலேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவின் தெற்கு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இந்தோனேசிய நாட்டவர்கள் 3 பேரும், மலேசிய நாட்டவர்கள் 4 பேரும்…
மேலும்

பாராளுமன்றத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர்

Posted by - May 6, 2018
பாராளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெறவுள்ள 8 ஆம் திகதியன்று விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற செயலமர்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற நடவடிக்கைகள்…
மேலும்

நாட்டின் அபிவிருத்தி பாரிய வீழ்ச்சி- கோட்டாபய

Posted by - May 6, 2018
ஒழுங்கான தலைமைத்துவம் வழிகாட்டலின் அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்படாமையினால் நாட்டின் அபிவிருத்தி பாரிய வீழ்ச்சியை எதிர் நோக்கியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை தோல்வியடையச் செய்வதே அனைவரினதும் நோக்கமாக இருந்ததே அல்லாமல், சிறந்த தலைமையின்…
மேலும்

நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையை அங்கீகரிக்கின்றோம்-ரவுப் ஹக்கீம்

Posted by - May 6, 2018
நாட்டின் ஜனாதிபதி முறைமையில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். ஒரு கட்சியின் நலனுக்காக தனக்கு வேண்டிய ஒரு பகுதியை மாத்திரம் கொண்டு…
மேலும்

காலி முகத்திடலுக்கு அரசாங்கம் பயந்ததனால், காலியில் நடாத்துகிறோம்- மஹிந்த

Posted by - May 6, 2018
கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டம் நாளை (07) காலியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த மே தினக் கூட்டத்தை நடாத்த காலி முகத்திடலை வழங்கிய அரசாங்கம் அச்சத்தில் இம்முறை அதனை வழங்க மறுத்துள்ளதாகவும், இம்முறை…
மேலும்

ஐ.தே.க.யின் மே தினக் கூட்டம் நாளை

Posted by - May 5, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நாளை (06) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் இதற்கான அழைப்பிதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியாவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்து

Posted by - May 5, 2018
வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே இன்று (05.05.2018) மதியம் 2.45 மணியளவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒமந்தை பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியாவிலிருந்து பாவற்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த…
மேலும்

சொந்த செலவில் பாதை போட்ட பிரதேசவாசிகளுக்கு நீதிமன்றத்தால் அபராதம்

Posted by - May 5, 2018
பதிய பெலல்ல – வியன்வல மடுமான சந்தியில் இருந்து கலபெலியாவ வரையான திவன வரல்காட்டிய வீதியின் இரண்டு பக்கங்களிலும் கடந்த 45 ஆண்டுகளாக வசிக்கின்ற 36 குடும்பங்களுக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி கட்டாயமாக தேவைப்படுகின்ற 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்…
மேலும்

பைசர் முஸ்தபாவின் அதிரடி உத்தரவு!

Posted by - May 5, 2018
விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் எச். எம். பி. பி. ஹேரத்தை பணி நீக்கம் செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உத்தரவிட்டுள்ளாதாக விளையாட்டுத்துறை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று  ஆரம்பமாகியுள்ள  தெற்காசிய கணிஷ்ட தடகள போட்டிக்காக…
மேலும்

அம்பதென்ன பள்ளிவாயலைத் தாக்கிய மூவர் சந்தேகத்தின் பேரில் இன்று கைது- பொலிஸ்

Posted by - May 5, 2018
கண்டி திகன பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று பேர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் புஜாபிடிய,…
மேலும்