நிலையவள்

A/C முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

Posted by - June 21, 2018
மீன் பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும் போது பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளுவதற்காக குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள கிராமிய பொருளாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரரய்ச்சி சீனா…
மேலும்

மன்னாரில் கழுதைகள் மருத்துவமனை திறந்து வைப்பு

Posted by - June 21, 2018
பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் தாயிலான் குடியிருப்பு மக்கள் இணைந்து மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் இன்று (21) வியாழக்கிழமை காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில்…
மேலும்

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - June 21, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூலை 05ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (21) பிறப்பித்துள்ளது. மத்திய வங்கியின்…
மேலும்

மழையுடனான காலநிலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - June 21, 2018
நாட்டின் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்று சற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
மேலும்

குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் மேன்முறையீடு

Posted by - June 21, 2018
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு எதிராக நடுவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக தினேஷ்…
மேலும்

மகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி பிரஜையின் சடலம் மீட்பு

Posted by - June 21, 2018
மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய பிரஜையின் சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவின் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வரதென்ன பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து அவரின் சடலம்…
மேலும்

பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம்-அஜித் பி பெரேரா

Posted by - June 21, 2018
பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். திருடர்கள் பிடிக்கப்படுவதில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். ஆனால் திருடர்கள் பிடிக்கப்படுகிறார்கள்.…
மேலும்

11 சுற்றுலாப் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - June 21, 2018
திருகோணமலை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்திருந்தவர்களில், 11 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம், சிலாபம் பகுதியிலிருந்து வருகை தந்த குறித்த சுற்றுலாப் பயணிகள், தாங்களே மீன், பருப்பு மற்றும் அச்சாறு போன்ற…
மேலும்

ஹட்டன், வனராஜா தோட்டப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் – மக்கள் பீதியில்

Posted by - June 21, 2018
ஹட்டன் டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தின் காரணமாக தேயிலைமலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் இத்தோட்டத்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்திலும், டிக்கோயா வனராஜா தமிழ் வித்தியாலயத்தின் வளாகப்பகுதியிலும்…
மேலும்

O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

Posted by - June 21, 2018
இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என் ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு…
மேலும்