நிலையவள்

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகினார்

Posted by - July 5, 2018
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.அவர் பதவி விலகும் வகையில் அவரது அலுவலகத்தில் சற்றுமுன்னர் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும்

விஜயகலாவுக்கு எதிராக அத்தனை நடவடிக்கையையும் எடுப்போம்- மஹிந்த

Posted by - July 5, 2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரன் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுபோன்றவற்றுக்கு நடவடிக்கை எடுக்கும் போது ஒழுங்குமுறையொன்று காணப்படுவதாகவும்…
மேலும்

விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது -கோத்தபாய

Posted by - July 5, 2018
சர்­வ­தேச ரீதியில் பயங்­க­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட விடு­தலைப் புலிகள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயற்பாடாகும். அதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது. எனவே அரசியல மைப்பை மீறியவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அவருக்கு எதிராக…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கவில்லை – சைனா ஹாபர் நிறுவனம்

Posted by - July 5, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையற்றது என்று சைனா ஹாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சைனா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. ஒருபோதும் இலங்கையின் உள்ளக…
மேலும்

வேலை வாங்கித்தருவதாகக் கூறி 40 இலட்சம் ரூபா பண மோசடி செய்த இருவர் கைது-பொலிஸ்

Posted by - July 5, 2018
வேலை வாங்கித்தருவதாகக் கூறி சுமார் 40 இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த இருவர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கடவத்தை பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்திச்சென்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.…
மேலும்

ஹபரணயில் விபச்சார விடுதி முற்றுகை 31 பெண்கள் கைது

Posted by - July 5, 2018
ஹபரன பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த, விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த 31 பெண்களை ஹபரன பொலிஸார் கைது செய்துள்ளனர். கெகிராவ மற்றும் ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றங்களில் பெறப்பட்ட சோதனை உத்தரவுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
மேலும்

சிறுத்தை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை

Posted by - July 5, 2018
கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை ஒன்றைத் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்தப் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர்கள் 10…
மேலும்

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் -சரத்

Posted by - July 5, 2018
விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்…
மேலும்

இலங்கையில் இணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு – பூஜித்

Posted by - July 5, 2018
தற்போது இலங்கையில் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார். கைத்தொலைபேசி மற்றும் கணினிகளை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாக, கண்டி…
மேலும்

போதை பொருட்கள் சுங்கப்பிரிவால் பறிமுதல்

Posted by - July 5, 2018
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை போதைப்பொருட்கள் இலங்கை சுங்க பிரிவால் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது.2945 கிராம் ஹஷீஸ், 2000 கிராம் கஞ்சா, 220 போத்தல் விஸ்கி, 225 போத்தல் வைன் மற்றும் 100 கேன் பியரே இவ்வாறு இலங்கை…
மேலும்