நிலையவள்

மத்துகம சம்பவம் ; மூவருக்கு விளக்கமறியல்

Posted by - August 13, 2018
மத்துகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கொட பகுதியில் காரில் பயணித்திருக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6 ஆம் திகதி யடதொல – அளுத்கம வீதியில் மணிக்கொட பகுதியில்…
மேலும்

நெல்லியடி, மாலு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 13, 2018
நெல்லியடி, மாலு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனங்கள் சிலவற்றை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் முன்னால் வந்த மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் பலத்த காயமடைந்த நபரை மந்திகை…
மேலும்

அரசாங்கத்தின் நெருக்கடிகளால் நிர்கதியாகி இருக்கிறேன்-தயாசிறி

Posted by - August 13, 2018
அரசாங்கத்திற்குள் இருக்கும் நெருக்கடிகள் காரணமாக தான் நிர்கதியாகி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…
மேலும்

மலையகத்தில் கடும் மழை, பல இடங்களில் மண்சரிவு, போக்குவரத்து துண்டிப்பு

Posted by - August 13, 2018
மலையகத்தில் பல பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு சில இடங்களில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் சலங்கந்த பிரதான வீதியில் இன்று அதிகாலை 6.30 மணியளவில எட்லி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால்…
மேலும்

தேர்தலை நடாத்த அரசுக்கு ஈடுபாடு இல்லை – பெப்ரல்

Posted by - August 13, 2018
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு பொது தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சப்ரகமுவ, கிழக்கு மற்றும்…
மேலும்

வடக்கில் அமுலாக்கப்படும் வீட்டுத்திட்டத்தை எந்த நாடு முன்னெடுத்தாலும் பிரச்சினையில்லை-விக்னேஸ்வரன்

Posted by - August 13, 2018
வடக்கில் அமுலாக்கப்படும் வீட்டுத்திட்டத்தை, இந்தியா அல்லது சீனா ஆகியவற்றில் எது முன்னெடுத்தாலும் தமக்கு பிரச்சினை இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும்

பேராதனை பல்கலைக்கழகம் இன்று மீண்டும் திறப்பு

Posted by - August 13, 2018
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் உப்புல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பொலிஸ் பாதுகாப்புடன் ஞானசார தேரருக்கு இன்று அறுவைச் சிகிச்சை

Posted by - August 13, 2018
நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை இன்று இடம்பெறவுள்ளது.சிறைத்தண்டனை…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

Posted by - August 13, 2018
யாழ்ப்பாணம், கோப்பாய், இருபாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (12) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில்…
மேலும்

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தம்

Posted by - August 13, 2018
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் இம்மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 21ம் திகதியுடன் இந்தப் பணிகள் நிறைவடையவுள்ளது. இந்தப் பணிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
மேலும்