மன்னார் மடு பிரதேசசபைக்கு உட்பட்ட மடுவீதி பகுதியில் இராணுவம் பிரம்மாண்டமான வியாபார நிலையங்களை அமைத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள சாதாரணதர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வாழ்நாள் முழுக்க இலவசமாக பயணிக்க Cebu Pacific Airlines நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் பௌத்த விகாரையின் கட்டடப்பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு வழி என வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் 90வீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், விசாரணை முடிவடையும்போது அதன் விளைவுகளை விரைவில் கோத்தபாய ராஜபக்ஷ அனுபவிப்பார் எனவும் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.