பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்பட்டும் தமிழியல் 2016 கான இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் 96 புள்ளிகள் பெற்று செல்வி பரமேஸ்வரன் சுசானி உலக சாதனை படைத்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா தொடர்பாக ஐநா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறீலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் மற்றும் கொமன்வெல்த் பணியக விவகாரங்களுக்கான இணை அமைச்சருமான அலோக் சர்மா, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டு அறிந்துகொண்டார்.
முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 77கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்து, விசேட காவல்துறையினரால் குறித்த கஞ்சாப் பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவக் கொமாண்டோக்களால் மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகளை மீட்கும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்க்காகம் கூட்டுப்பயிற்சியின் ஒரு கட்டமாகவே இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.