நாட்டின் தற்போதைய அரசாங்கம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் கட்டியெழுப்பபடுவதை புறந்தள்ளி விட்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அனுமதி இன்றியே வற் வரி திருத்தத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியது முற்றிலும் தவறான விடயம் என ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படுவது குறித்து அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் இடமளிக்காது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது நாளைய தினம் வவுனியாவில் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணை உரியமுறையில் இடம்பெற்று வருவதை வரவேற்பதாக சிபிஜே என்ற சர்வதேச ஊடகவியலாளர் குழு தெரிவித்துள்ளது.