ஈராக்கில் மது விற்பனைக்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு. இங்கு ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே பாராளுமன்றத்தில் அப்பிரிவை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர்.
ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணமாக அமைந்தது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தெற்கின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் வழங்கவேண்டுமனால், சிறீலங்கா அரசியல் பொருளாதார மறுசீரமைத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையொன்றை விதித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதிகோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் எதிர்வரும் 25ஆம் திகதி பூரண கர்த்தாலை அனுட்டிக்க தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் மட்டம் பதவியொன்றை உருவாக்குவதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் பொலிஸ் புலானாய்வு பிரிவு உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை ராஜபக்ச தரப்பு சூழ்ச்சியாளர்களின் செயற்பாடு என யாழ்ப்பாணத்தில் பணி யாற்றிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார். யாழில்…