துபாய் விமான நிலையத்தில், பயணிகள் சேவை விவரங்கள் தமிழ் மொழியில் அறிவிக்கப்படுகிறது.உலக அளவில் சுற்றுலா நகரங்களில் துபாய் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும். துபாயில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து…
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை தவிசாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் , எழுக தமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்ட செயற்ப்பாட்டாளர்களில் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த போது, அப்போது டுபாய் அரச வங்கி ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய ஒருவரிடம் இருந்து மூன்று வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தினால் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் மேலும் மோசமடையும் என அமெரிக்காவின் நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவினை மீளாய்வு செய்யவேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டார்.
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் நின்ற பல நூறு கால் நடைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பே பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தைரிவிக்கின்றனர். வலி. வடக்கின் சில பகுதிகள் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட…