கச்சத்தீவு புதிய தேவாலய திறப்பு விழாவில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழர் தேசிய முன்னனியின் இளைஞரணி செயலர் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
புதிதாக உருவாகும் புயல், சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சானில் உள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், அங்கு கலகத்தைத் தடுப்பதற்காக இராணுவத்தினரை குவிப்பதற்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனையைத் தான் நிராகரித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதப்பட்டார்.