பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சீன அதிபர் க்சி ஜின்பிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம் தொடர்பாக இதுவரையில் போதுமான விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” எனவும் கூறினார்.
தமிழக உள்மாவட்டங்களில் இன்று 111 டிகிரி வரை வெயில் கொளுத்தும் எனவும், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சாலை பணியாளர்கள் ஆதரவு அளிக்கும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் கூறியுள்ளார்.
மதுக்கடைகளை திறக்க சாலைகளை வகைமாற்றம் செய்வதை கண்டித்து தமிழகம் முழுவதும் 27-ந் தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்த இடமளிக்கக்கூடாது. அதற்கெதிராக மக்கள் போராடவேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் ஊடகப்பேச்சாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.