தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென். கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
மூன்று கோரிக்கைகளை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை மீள் அறிவித்தல் இன்றி மீண்டும் ஆரம்பிக்க வேண்டி ஏற்படும் என, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
மெக்சிகோவில் விருது பெற்ற பத்திரிகையாளர் ஜேவியர் வால்டெஸ் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
137 ஆண்டுகளில் உலகின் மிக வெப்பமான 2-வது நாளாக ஏப்ரல் 17-ந்தேதி இருந்தது.தற்போது கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அளவில் பதிவான வெப்பம் குறித்து சமீபத்தில் கணக்கெடுக்கப்பட்டது.
2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் – துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பின் போது பாதுகாப்பு வளையத்தை மீறி வெள்ளை மாளிகைக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. முயன்றதால் வெள்ளை மாளிகை சிறிது நேரத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டது.