முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாகிஸ்தான் பயணத்தினை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேன விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் அபிலாஸைகளை பூர்த்தி செய்வதாகவும் ஊழல்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதி அளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதாகவும் எனினும் அரசாங்கம் தற்போது அனைத்தையும் மறந்துவிட்டு…
சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக புகுந்து அங்குள்ள பொது சொத்துக்ளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக மருத்துவப் பீட மாணவர் தலைவர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, ஊழலுக்கு எதிராக செயற்பட போவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குமார் சிலர் சமூக, கலாசார மனநிலையை அடிப்படையாக கொண்டு சிங்கள பௌத்த மதம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்ககத்தின் உபவேந்தர் என பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரி வருமானத்தில் 80 வீத பங்கை செலுத்தி வரும் மறைமுக வரிகளை 60 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபையை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைத்தமை உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வைக் கோரி, உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவிக்கின்றது.