பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பீஜிங் சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன நாட்டின் சக அதிகாரி யங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சிக்கிம் எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒன்றுபட்டால், உண்டு வாழ்வு என்ற தலைப்பில் விழா ஒன்றில் மறைந்த ஜெயலலிதா கூறிய குட்டிக்கதையை நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியிட்டு, இரு அணிகளின் இணைப்புக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளது.
விவசாயத்தை ஒழித்துவிட்டு பணத்தையா சாப்பிட முடியும்? என்பதை உணர்த்தும் விதமாக இலைகளில் பணத்தை வைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் கதிராமங்கலம் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஜூலை 31 ஆம் தேதி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக வைகோ அறிவித்துள்ளார்.