வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடமாகாண சபை உறுப்பினர்களிடம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் வைத்து விசரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மத்தல சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை பிற நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை நிரப்புவதற்காக தேர்தல் நாளை நடக்கிறது. இதில் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள்.
வெனிசுலா நாட்டில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய சூழலில் 13 பேர் வரை பலியாகிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.