இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க இலங்கை விஜயம் செய்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல்டிராவிஸ் சின்னாய்யாவை தங்களின் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜாம்பியா மற்றும் உக்ரையன் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறியில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் 76 பேர்களை யாழ் பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உள்ள முறையான சட்டநடவடிக்கையின் போது அவருக்கு எதிராக சாட்சி வழங்குவதற்கு தாம் முன்னிலையாவதாக பீள்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவின் குற்றமற்ற நிலையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
நியூசீலாந்தில் தொழில் ரீதியாகக் குடியேறிவர்களில் முதன்மைக் குடியேற்றவாசிகள் என்ற பெயரைப்பெற்றவர்கள் இலங்கையர்கள் வைத்தியர்கள் என்ற விபரத்தை அமரர் டொக்டர் இராசலிங்கம் எழுதிய வைத்தாங்கி ஒப்பந்தம் பற்றிய ஆங்கில நூலில் அறிந்தேன்.