சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை கடலை 12 மணி நேரத்தில் நீந்தி சனிக்கிழமை கடந்து சாதனை புரிந்தார்.
இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தத்தை போக்க சென்னையில் இன்று 13 இடங்களில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த பயிற்சியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பங்கேற்றனர்.
பகை நாடுகளாக விளங்கிவரும் வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் அடுத்தமாதம் சந்திக்கவுள்ள நிலையில் இருநாடுகளின் அதிகாரிகள் மட்டத்தில் வரும் 29-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.