செர்பிய துணை பிரதமர் நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்த பயணத்தில் துணை ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஆகியோரை சந்திக்க உள்ளார்.
மராட்டியத்தில் கொதிக்கும் சர்க்கரைப்பாகில் விழுந்த 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் வெந்துபோனதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் இந்து கோவிலின் கணக்குகளை சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் தணிக்கை செய்ததில் பண மோசடி செய்தது தொடர்பாக நிர்வாகிகள் இரண்டு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக விமர்சிக்க கூடாது’, என்றும், ‘கருணாநிதியே தமிழ் விருதை பெற்றது தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார்’, என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று இலங்கையின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.