ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரி குணரத்னவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை என சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குழப்பம் இருப்பதால் அதனை திருத்தம் செய்து சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்றும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார்.
வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.