யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் மாணவர்கள் தலை முடியை முற்றாக வெட்டி மொட்டையடித்தமை தொடர்பாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்க யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை கோரியுள்ளது.
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணத்தின் பிரதி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடிக்குரிய நந்திக்கடல் மற்றும் நாயாறு நீரேரிகள் என்பன முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன. சுமார் 21 ஆயிரத்து 265 ஏக்கர் நிலப் பரப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தால் இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தினுள்…
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விஷேட மேல் நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இந்த நீதிபதிகளை நியமித்துள்ளார்.
நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் காவல் துறை அத்தியகட்சகர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை முறைப்படு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை. உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றினை இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்…