சென்னை-சேலம் விரைவு சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு 2½ மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறினார்.
சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பத்திரிகையாளர்கள் ஒரு வரம்பை வகுத்துக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் சுஜாத் புகாரியின் (சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்) நிலைதான் உங்களுக்கு என பாஜக தலைவர் லால் சிங் பேசியுள்ளார்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகை சென்ற அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.