கடலூர் மாவட்டம் லால்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின்சாரத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் வணிக உதவியாளர் தமிழினியனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று தே.மு.தி.க-வினர் இன்று மதுரை மாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கினர்.
தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாராளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டது.