ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையினை பிரதமர் தோல்வியடைய செய்து, ஜனாதிபதியை வீழ்த்தியுள்ளார் என குறிப்பிடுவது வேடிக்கையாகவே காணப்படுகிறது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…
புதிதாக நியமிக்கப்படவுள்ள இரண்டு தூதுவர்கள் மற்றும் கூட்டுதாபனமொன்றின் தலைவர் ஒருவரது தகுதிகள் குறித்து ஆராய நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர், அலிஸ்வெல்ஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகளில் பெரும்பாலானவை தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதனால் பாடப் புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகளில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இராணுவ பிரிகேடியர்கள் ஐந்து பேர் மேஜர் ஜெனரல் தரத்துக்கும் லெப்டிணன்ட் கொமாண்டர்கள் 25 பேர் கொமாண்டர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.